Wednesday, August 29, 2012

மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள் (நான்,அட்டக்கத்தி,மிரட்டல்,18 வயசு)



வணக்கம்பா ,
 
இவளவு நாளா இன்னா பண்ணிகின்னு இருந்தான்.இம்புட்டு படம் வந்திருக்கு , பாட்டு வந்திருக்கு இவன் இன்னான்னா ஒண்ணுக்கும் விமர்சனம் எழுதலன்னு கடுப்பகியவர்கள் மன்னிக்கவும். “தாண்டவம்” பாடல் வந்து பல நாள் ஆகிவிட்ட காரணத்தால் எழுத முடியவில
்லை (எழுத வேண்டும் என்றால் கமண்டில் சொல்லுங்க).கடைசியா நான் பார்த்த நான்கு படங்களின் மொக்கை பட வரிசை இதோ :
நான்  : விஜய் அன்டனி நடிகராக, தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்! இருக்கிற மொக்க ஹீரோக்கள் தமிழ் சினிமாவுக்கு போதும் நீங்களும் ஏன் வாரிங்கன்னு? கேக்க தோன்றிய படம்! உள்ளே போகும் போது போகனுமா? இல்ல! எஸ்கேப் ஆகி ஓடி வந்திரு கைப்புள்ளன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல். சரி எத்தினி மொக்கப்படம் பாத்திருப்பம் அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டு போகுதுன்னு உள்ள போனா!...............

சூப்பரப்பு இன்னா நடிப்பு இன்னா மியூசிக் இன்னா டையரக்ஷன்! படம் முழுவதும் திருப்பங்கள். எப்பிடி முடிக்க போகிறார்கள் என்று கடைசிவரை கணிக்க முடியவில்லை.”ஆள்மாறாட்டம்” அதுதான் கதை ஆனால் சொன்னவிதம், சொன்ன காரணங்கள் அருமை.கடைசியில் தொடரும் என்று முடித்திருப்பது சிறப்பு. விஜய் ஆண்டனியின் முகம் கதாபாத்திரத்துக்கு கனகட்சிதம். நல்ல படம் என்ற காரணத்தால் மொக்கை படவரிசையில் கடைசி இடமான நாலாவது இடத்தில்.மொத்தத்தில் “நான்” – வீண் இல்லை!

அட்டக்கத்தி – இது போன்ற கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு ஆனால் நம்ம அன்றாட வாழ்கையில் பார்ப்பது தான். “திரிஷா போன திவ்யா ”என்று ஊரை சுற்று எங்களை போன்றவர்களை அப்பட்டமாக படம்பிடித்து காட்டியிருக்கிறார்கள்.”ஆடி போனா ஆவணி ” கானா பாடல் காதுகளுக்கு இனிமை! கதை என்று சொல்வதற்கு எதுக்கும் இல்லை ஒவ்வொரு இளைஞனும் தன்னை தானே திரையில் பார்க்கலாம். காதலில் தோத்தா முகத்த சொகமா வைச்சிருக்க்னுன்னு கஷ்டப்பட்டு சோகத்தை முகத்தில் காட்ட முயன்று முடியாமல் சிரிக்கும் காட்சி அருமை.இறுதியாக வரும் பஸ் காட்சி பலரது வாழ்கையில் நடந்திருக்கும்! நல்ல படம் அதனால் நமது மொக்கை படவரிசையில் மூன்றாம் இடம். மொத்தத்தில் “அட்டக்கத்தி”-இளைஞர்களின் நெஞ்சை குத்திவிட்டது!

மிரட்டல் –தல அஜித் படத்தின் டைட்டில் ! அந்த ஒரே காரணத்துக்காக போய் பல்பு வாங்கிய படம். ஒரே ஒரு கேள்வி “என்ன இளவுக்குடா தாதா தங்கச்சிய நம்ம ஹீரோக்கள் லவ் பண்ணுறத நிறுத்த மாட்டேங்குறாங்க” டம்மி வில்லன் , பாசமான தாதா பிரபு , ஆறடி லைட் போஸ்ட் ஹீரோ, அஞ்சடி ஆரஞ்சு பழ ஹீரோயின்! மனதுக்கு ஆறுதலுக்காக நம்ம சந்தானம்! இதை தவிர படத்தில் ஏதும் இல்லை. படம் பார்க்கும் போது சிரித்தாலும் படம் முடிந்த பிறகு மிஞ்சுவது ஏமாற்றம் தான் .
மன்சுரலிகாந்த்,பாண்டியராஜன்,சந்தானம் மட்டும் நகைச்சுவையால் தனியே தெரிகிறார்கள்.”ரேடியோ ரேடியோ ” பாடல் மட்டும் பிடித்திருந்தது. மற்றப்படி மிரட்டல்- மிரட்டுகிறது படம் பார்க்க போனவர்களை!

18 வயசு – “ரேணிகுண்டா” இயக்குனரின் அடுத்த படைப்பு! ஆனால் ரேணிகுண்டா படத்தின் கால் தூசுக்கு கூட நிகரில்லாத உலக மொக்கை படம். ஐயோ! அந்த கருமாந்திரம் பிடிச்ச படத்த நினைக்க கூட முடியல! ஹீரோக்கு மனவியாதி எந்த விலங்க பாத்தாலும் அது மாதிரி ஆகிருவாறு (மனதளவில் மட்டும்) என்ன சொத்த சொறி கதை! நண்பர்கள் பேச்சை கேக்காமல் ரேணிகுண்டா மோகத்தில் போய் அழுதுவிட்டு வந்த படம் . என்ன விமர்சனம் சொல்ல! காதலியின் தொல்லை தாங்கதவர்கள் இந்த படத்துக்கு கூட்டிட்டு போங்க! அடுத்த நாள் நாய் மாதிரி குலையுங்க! பிறகு பக்கத்தில கூட வரமாட்டாள். போங்கப்பா கெட்ட கெட்ட வார்த்தை தான். வாயில வருது! அதனால் நமது மொக்கை பட வரிசையில் முதல் இடத்தை தட்டி செல்கிறது! மொத்தத்தில் “18 வயசு” – படம் பாக்க போறவங்களுக்கு அல்பாயிசு!
மேலும் விமர்சனங்களுக்கு ,






Friday, August 24, 2012

மண்ணாங்கட்டி-மாற்றான் இசை விமர்சனம்




வணக்கம் நண்பர்களே !
 

ரொம்ப நாள் கழிச்சு ஒரு விமர்சனம் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி
இதில இன்னா குஷ்டம்ன்னா இதுகெல்லாம் விமர்சனம் எழுதணுமா ?
என்னுறது தான்! மாற்றான் படம் தான் காப்பின்னு பாத்தா (இந்த லிங்க சொடுக்கி பாருங்க :http://niroshanjc.blogspot.com/2012/07/stuck-on-you.html.) பாட்டு காப்பியோ காப்பி!


 ஐஞ்சு பாட்டு! 
எந்தப் பாட்ட கேட்டாலும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.” யோவ் ஹாரிஸ் உனக்கு புதுசா பாட்டு போட வரவே வராதா “ என்னு ரசிகர்கள் கழுவி கழுவி ஊத்தும் ரேஞ்சுக்கு எல்லா பாட்டும்! என் தலை எழுத்து இத எழுதுறது ! உங்க தலை எழுத்து இதை எல்லாம் படிக்கிறது.

01.ரேட்டை கதிரே – நா.முத்துக்குமாரு பாட்ட எழுதி இருக்காரு! இன்டர்டக்சன் சாங்காம்! ”என்றென்றும் புன்னகை” பாட்டுட பீட்ட எடுத்து “கஸலி பிஸலி” பாட்ட கசக்கி பிழிஞ்சு! போட்டிருக்காரு! எதோ சும்மா கேக்கலாம்!
ரேட்டை கதிரே – மொட்டந்தலையில மல்லிகைப்பூ !


02.நானி கோனி ராணி – ஆஹா என்ன ஒரு கற்பனை! கருமாந்திரம் பிடிச்ச்சவன்களா ! நானியும் ராணியும் என்ன கொணிக்குள்ளையா குடும்பம் நடத்துறாங்க! விவேகாவின் வரிகளுக்கு ஆஸ்கார் அவாட் குடுக்கலாம்.”வாராயோ வாராயோ” பாட்ட போட்டு இடையில “போய் சொல்ல இந்த மனசுக்கு” பாடுட “எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே” மியூசிக்க போட்டு ஒரு மாதிரி பாட்ட முடிச்சிருக்காரு.
நானி கோனி ராணி- வாய மூடிடோ போ நி !


03.தீயே தீயே –அண்ணன் பா.விஜய் பாட்டு எழுதி இருக்காரு! கிளப்ல பாடுற பாட்டு ஒரு வரி கூட விளங்கல. என்ன சொல்லவாறீங்க விஜய் சார் ! மற்றும் ஒரு மொக்க பாட்டு! சகிக்கல! எத்தினி பாட்டோட மியுசிக்க சுட்டுருக்கருன்னு ஹாரிஸ்ஸுக்கு கூட தெரியாது !ரப்ப மட்டும் “ஹசளி புசளி” சுட்டு சாவடிச்சிருக்காறு மனுஷன் !
தீயே தீயே – வயிறு எரியுது !


04.யாரோ யாரோ –“யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை” அதாங்க பழனி படப்பாட்டுட பீட்டு ,ஸ்பீட்டு எல்லாத்தையும் குறைச்சு புதுசு மாதிரி போட்ட கண்டு பிடிக்க மாட்டம்னு நினைச்சீங்களா ஹாரிஸ் சார் !தாமரையின் வரிகள் அருமை ! இரண்டு பேரும் வெட்டி பிரிக்கப் பட்ட பிறகு பீல் பண்ணி பாடுற மாதிரி பாட்டு அத கேட்டு நான் பீல் பண்ணினது தான் கூட! போங்கடா நீங்களும் உங்க மொக்க செண்டிமெண்ட் பாட்டுகளும் எப்படா தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போக போறீங்க . கொசுறு தகவல் இப்பிடி ஒரு பாட்டு “Stuck On You” படத்திலயும் இருக்கு!
யாரோ யாரோ –சத்தியமா நான் இல்லைங்க!


05. கால் முளைத்த பூவே –கார்க்கியின் வரிகள் ஹாரிஸின் மியூசிக்கில் கிக்கி,சீரழிஞ்சு ,நசிஞ்சு,நார் நாரா போய்ச்சு! என்ன வரிகள் என்ன கருமாந்தரத சொல்லுறாங்க ஒரு எழவும் விளங்கல! மியூசிக் சுட்டார் என்னு சொல்ல மாட்டேன். எனுனா இது எல்லா “பலே” நடனங்களிலும் பயன் படுத்தும் பலே மியூசிக்!
கால் முளைத்த பூவே – காதல ரெத்தம் வருகுது

சொந்தமா படமும் எடுக்க மாட்டீங்க! சொந்தமா பாட்டும் போட மாட்டீங்க !
அப்ப என்ன ம .....க்கு சிங்கப்பூர்ல கொண்டே இசை வெளியீட்டு விழா சேய்யிறீங்க! அங்க போய் எங்க தமிழ் மானத்த விக்கவா!
மொத்தத்தில் மாற்றான் இசை –பீசா ,பெர்கர் இருக்க வேண்டிய இடத்துல தவிடும் பருத்தி கொட்டையும் ,புண்ணாக்கும் வைச்சிருக்காங்க!

 பி.கு: சரி விடுங்க !போகும் போது மறக்காம ஒரு லைக்கை இந்த பேஜுக்கு போட்டுட்டு போங்க.