Friday, July 20, 2012

மண்ணாங்கட்டி - துப்பாக்கியின் கதை அம்பலம்





துப்பாக்கி” ஒவ்வொரு விஜய் ரசிகர்கனதும் தற்போதைய இதயத்துடிப்பு! படத்தை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை! படத்தினுடைய கதை பற்றி ஒரு வதந்தி கூட வராததால் (ஹிஹிஹி கிளப்ப போறோமில்ல) உங்களுக்காக பல கேப்பமாரித்தனங்கள் செய்து! சந்தோஷ்சிவனுடைய ஆஸிஸ்டனோட பிகரு மாதிரி கடலை போட்டு உருவிய கதை உங்களுக்காக! (படம் வந்த பிறகு திட்டி கமன்ட் போட மாட்டோம் என்று சத்தியம் செய்து விட்டு கீழே போங்க!)

“இன்றைய உலகம் கணணி தொழில்நுட்பத்தை மட்டும் பெரிதும் நம்பி இயங்கி கொண்டிருக்கிறது..................”என்னு தொடங்கும் டொக்குமண்டரி உடன் டைட்டில்! (“விஜய் போலிசுன்னு சொன்னாங்க! பொய் சொல்லாத மண்ணாங்கட்டி” அப்பிடி சொல்லப்படாது தொடர்ந்து வாசியுங்க).

எயாபோர்டில் பணையக் கைதியாக மத்திய அமைச்சர் ஒருவரை பிடித்து வைத்து மிரட்டும் தீவிரவாதிகளை பிடிக்க ஜெகதீஸ் (அதாம்பா நம்ம இளைய தளபதி)தலைமையிலான அதிரடிப்படை களமிறங்குகிறது! (சத்தியமா விஜயகாந்த் படம் இல்லைங்க) மூணு பேரின் உயிரை கொடுத்து அமைச்சரை காப்பற்ற அவரும் இதற்கு உடந்தை என்னு நம்ம தளபதிக்கு தெரியவர gunன எடுத்து டிஸ்யும் அமைச்சர போட இவர வேலைய விட்டு தூக்கிர்றாங்க!

போங்கடா உங்க வேலையும் நீங்களுமுன்னுட்டு ட்ரெயின் புடிச்சு மும்பைக்கு போய் சத்தியனோட தங்கி வேலதேடுராறு! தளபதி ஜாவாவில புலியாம்! அதனால ஐரீ கம்பனில வேலை கிடைக்குது! அங்க நம்ம ஹீரோயின் காஜல சந்திக்கிறாரு! ஏற்கனவே சென்னைல காஜல மாப்பிள்ள பக்க போனவருக்கு பதிலா யுனிபோம்ல தளபதி போய் பொம்பள ரவுடிய பற்றி விசாரிக்க அவங்க வீட்டுகாரங்க காஜல பற்றி சொல்லி கலகல காமிடி சீனாம்! 

மும்பையில் நம்ம தளபதிக்கும் காஜலுக்கும் லவ்வு பத்திகொள்ள சுமுகமா போகும் கதையில்! “ம்பப்ருதி” (இது விளங்கினா கமன்ட் போடுங்க!)! மும்பை பங்குச்சந்தையின் வலை தளத்தில் சில மாற்றங்கள் தானாக நடக்க குழம்பிப்போகும் அதிகாரிகள் தளபதியின் உதவியை நாட! அவரு ஒரு கம்பியுட்டர்ல இருந்த படியே ஹக் செய்ய முயலும் கம்பூட்டர வெடிக்க வைக்கிறாராம் !(இணையத் தளத்தில் தேடி பார்த்து இது சாத்தியமா என சொல்லுங்கள்!) 

இதன் பிறகு தளபதியை சைபர் கிரைம் தடுப்பு அதிகாரியா (???) மத்திய அரசு பதவி கொடுக்க! தளபதி இருக்கும் வரை இந்தியாவின் முக்கிய இணைய தளங்களை கைப்பற்ற முடியாது! என்பதால் தளபதியை கொல்ல பாம் வைக்க வழமை போல தளபதி எஸ்கேப் பாவம் காஜல் கண்ணு புட்டுக்குமாம்!
பிறகு என்ன வழமை போல எதிரிகளை தேடி பலிவாங்குறது தான் கதையாம்! கடைசி கிளைமாக்ஸ் ராணுவ ரகசியங்களை ஹக் செய்ய முயலும் கும்பலிடமிருந்து பாதுகாக்க வில்லனை காரில் துரத்திக் கொண்டே காஜலுக்கு கம்ப்யூட்டர் “கோட்ஸ்” சொல்ல அதை போன்ல கேட்டு கண் தெரியாத காஜல் எப்பிடி தடுக்கிறாங்க! அது தான் முடிவு! (கண்ண திறத்திட்டு டைப் பண்ணவே உயிர் போகுது இதுல .... சரி விடுங்கப்பா!)

இடையில் சைபர் கிரைம் உயர் அதிகாரியாக ஜெயராம் நல்லவரா ? கெட்டவரா? உண்மையில் விஜய் யார் ? வில்லன்களின் நோக்கம் என்ன ? விஜயால் சத்தியன் லோக்கல் ரவுடிகளிடம் சிக்கி சீரழிவது! என்று படம் முழுவதும் சுவாரசியதுக்கு பஞ்சம் இல்லையாம்! இன்னும் மூன்று பாடல்கள் படமாக்க வேண்டி இருப்பதால் படம் தீபாவளிக்கு தான் வருமாம் !
(இது அந்த பன்னாட பயல் சொன்ன கதை! டை ஹர்ட் -4 படம் தான் ஞாபகம் வருகுது படம் வந்த பிறகு இது உண்மையா பொய்யா என சொல்லுங்க !) 

விமர்சனங்களை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்
தொடர்புகளுக்கு :http://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal 
நன்றி - கலைஞன் 



Thursday, July 19, 2012

மாற்றானில் சந்தேகம் கேட்டு ! மாட்டிக்கொண்டு முழிக்கும் மண்ணாங்கட்டி! - கே.வீ.ஆனந்த் விளக்கம்!


விமர்சனங்களை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்
தொடர்புகளுக்கு :http://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal
நேற்று முன்தினம் மாற்றான் தொடர்பான சந்தேகம் ஒன்றை பதிவு செய்தது ! தான் எதிரொலி ட்விட்டர் வரை சென்று கே.வீ ஆனந்த் விளக்கம் சொல்லும் அளவிற்கு போய்விட்டது ! 
 
இதற்கு கே.வீ.ஆனந்த்  அவர்கள்  படம்  வந்த பிறகு பதில் தெரியும் என்று கூறியுள்ளார் ! 
பாவம் மண்ணாங்கட்டி
சூர்யா ரசிகர்களால் வெறி கொண்டு தேடப்பட்டு வருகிறார் ! மிஸ்டர் மண்ணாங்கட்டி உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத ஆராட்சி !
  

நேற்று முன்தினம் மண்ணாங்கட்டி  தரவேற்றம் செய்த புகைப்படம் !
http://www.facebook.com/photo.php?fbid=295160117249384&set=a.285948151503914.59184.285940164838046&type=1&theater




 

Friday, July 13, 2012

மண்ணாங்கட்டி- Stuck on You (மாற்றான்) விமர்சனம்



வணக்கம் தோழர்ஸ்!
 
மாற்றான் ட்ரைலர் வந்தது தான் வந்திச்சு ! ஒவ்வொருத்தனும் பேஸ்புக்குல “Stuck on you” படத்தோட கொப்பின்னு தெரியாத இங்கிலிசு படத்தை எல்லாம் சொல்லுறாங்க. அப்பிடி என்னதான் இருக்குன்னு படத்த டவுன்லோட் பண்ணி பாத்தா (தமிழே உனக்கு விளங்காது இதுல இங்கிலிசு படம் வேற பாக்குறியான்னு கேக்கதிங்க பாஸ் எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் ) நல்லாத்தான் இருக்கு .
 
பிறவியிலே ஒட்டிப் பிறந்த ரேட்டையர்கள் வேற வேற திறமைகளை கொண்டிருக்காங்க. ஒருத்தன் நல்ல சமைக்குறான் மற்றவன் நல்ல நடிக்குறான். ஒட்டி இருக்குறதால சந்திக்கிற பிரைச்ச்சனைகள்.பிரித்த பிறகு ஏற்படும் பசப்போரட்டமும் தான் கதை.
 
படத்தில த்திரிலிங் எல்லாம் இல்லை.சும்மா அதுபாட்டுக்கு போகுது.நம்ம இயக்குனர் சேரனோட படம் மாதிரி உணர்ச்சி பூர்வமா பாக்கலாம்.தவிர பில்ட்அப் எல்லாம் இல்லை.பார்ல நடக்கிற சண்டை மட்டும் சூப்பர். கே.வீ.ஆனந்தோட படத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. ஒட்டி பிறந்தவர்களது கதை என்ன ஒன்றை மட்டும் வைத்து மாற்றான அவர் சுட்டார் என்று சொல்வது தவறு.(கொய்யால ஒரு படத்த ஹாரிஸ் மியூசிக் மாதிரி அப்பிடியே சுடுவான்களா! நம்ம ஜீ.வீ.பிரஹஸ் மாதிரி தெரியாத மாதிரித்தான் சுடுவாங்க.)
 
இதுல ஒட்டி பிறந்த ரேட்டையர்கள் வேற வேற! மற்றன்ல ரெண்டும் ஒரே மாதிரி! கதைக்களம் ஒன்றாக இருந்தாலும் கதை வேறாகத்தான் இருக்கும். 

தப்பி தவறி இதே கதையாக இருந்தால்:
விஜய்க்கு ஒரு சுறா !
அஜித்க்கு ஒரு ஆழ்வர்!
விக்கிரமுக்கு ஒரு ராஜபாட்டை!
சூர்யாவுக்கு மாற்றான் ஆகிரும்! 



பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன்  

Saturday, July 7, 2012

மண்ணாங்கட்டி - The Orphan- விமர்சனம்




வாசக நெஞ்சங்களுக்கு மண்ணாங்கட்டியின் வணக்கங்கள்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம் “ORPHAN”.இது ஆங்கில “ஹோரர்”(அதாங்க திகில்) திரைப்படம்.கத்தி இல்லாமல்,கொடுரமான கொலைகள் இல்லாமல் படம் எடுத்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது.சாதாரண நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைசி பத்து நிமிடங்கள் காட்டாறாக பாய்வது தான் திரைபடத்தின் சுவாரஸ்ய கணங்கள்.
 

கதை :
அநாதை விடுதிக்கு செல்லும் தம்பதிகள் அங்கு அமைதியாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் எஸ்ட்டரை தத்தெடுக்கிறார்கள்.அதன் பிறகு ஸ்ட்டரால் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் தான் கதை அவர்களுக்கு ஒரு மகனும், வாய் பேசமுடியாத மகளும் ஏற்கனவே இருப்பதும் ஒரு மகள் இறந்து போனதும் என்று கதையை விரிவு படுத்தி கடைசி நிமிடங்களில் ரணகளப் படுத்தி இருக்கிறார் இயக்குனர். பின்னணி இசை ,கதாபாத்திர தேர்வு, கதைக்களம்,படம் பிடிக்கப்பட்ட இடங்கள் என்று எல்லாம் மிக அருமை!
 

கொலை செய்யும் சிறுமியை பேயாக சாத்தானாக சைக்கோவாக கட்டாமல் வேறு விதமாக புதுமையாக்கக் காட்டியது இயக்குனரின் வெற்றி.. சில அசைவ வார்த்தைகள் ,சில அசைவைக் கட்சிகள் இருந்தாலும் திகில் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி ..!
மொத்தத்தில் “ORPHAN”- திகில் சுவர்க்கம் !
(எச்சரிக்கை:- மச்சீஸ் படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு இரவில எந்த சின்ன பிள்ளைய பாத்தாலும் சூச்சூ வாற மாதிரி இருக்கு )  

பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன்  

Friday, July 6, 2012

மண்ணாங்கட்டி - நான் ஈ விமர்சனம்

                                                








வணக்கம் பாஸ் அண்ட் பாஸிஸ்,
“நான் ஈ” அப்பிடின்னா நாங்க என்ன கொசுவா என்னு டைரக்டர கலாய்க்க கூடாது. பாவம் மனுஷன் வித்தியாசமா ட்ரை பண்ணிருக்காரு . முதல்ல அவர பாராட்டிப்புடுவம்.

ஊருக்குள்ள சமூக சேவை செய்யிறாரு நம்ம சமந்தா, ஹீரோ நானி சமந்தா வீட்டுக்கு எதிர் வீட்டில இருக்குறாரு (கொக்கமக்கா ஏண்டா எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில மட்டும் “ஓகே ஓகே அட தேனட” மாதிரி பிகருக்க என்னு வருத்தப் படாதிங்க நண்பர்களா எல்லாம் விதி!) நம்ம வில்லன்கிட்ட சமந்தா டொனேசன் வாங்க போக வழக்கம் போல அவருக்கும் சமந்தா மேல லவ்ஸ் ஆகி 15 லட்சம் குடுத்து அனுப்புறாரு. பிறகு என்ன சமந்தா நானிய லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்சு நானிய ஆள வைச்சு போட்டு தள்ளுராறு.படத்த இனி எப்பிடி முடிக்கிறது. 


ஹீரோ வில்லன பலி வாங்கணும் ஆவியா வந்து கமல் சாரோட “கல்யாணராமன்” மாதிரி பழிவாங்கலாம். இல்லாட்டி தலைவரோட “அதிசய பிறவி ” ஸ்டைல்ல பழிவாங்கலாம். ஆனா ஈயா பிறந்து பழி(லி)வாங்கிறது தமிழ் சினிமாக்கு இல்ல உலக சினிமாவுக்கே புதுசு.
சிஜி சிஜி என்னு எதோ இருக்காம் (செல்போன் திரி ஜியோட அக்காவா இருக்குமோ) அதுல தான் அனிமேசன் சேய்திருக்காங்களாம். அனா சுப்பரப்பு! 




ஒவ்வொரு காட்சியும் அலட்டல் இல்லாத அதிகப்படி இல்லாத அனிமேசனால் கவர்ந்து இருக்காரு டைரக்டர். மதன் கார்கியுடைய “வீசும் வெளிச்சத்திலே” பாடல் வரிகள் அருமை. “ஈடா , ஈடா” பில்ட் அப் சாங் (ஈக்கெல்லாம் பில்ட்டப்பா) புதுமை.பின்னணி இசை ரணகளம். நானி ,சமந்தா வில்லன், எல்லாம் கன கட்சிதம். தியட்டருக்கு போய் குடும்பம் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய நல்ல படம். வருகின்ற 13 ஆம் திகதி வரை வசூலை அள்ளப் போவது உறுதி! (13 நம்ம தலையோட பில்லா 2 வருகுதடியோ!)




பின் குறிப்பு :    இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.


நன்றி - கலைஞன்  

Thursday, July 5, 2012

மண்ணாங்கட்டி - சகுனி விமர்சனம்

சகுனி விமர்சனம் 




மச்சீஸ் (மச்சான்ஸ்+மச்சினீஸ்) ,
 
யாரோ ஒரு அப்பாவி தயாரிப்பாளர் நம்ம டைரக்டர்கிட்ட மாட்டிக்கிட்டார் . உடன நம்ம கார்த்திய புக் பண்ணிட்டார் டைரக்டர். பிறகு என்ன ஹீரோயின் தேவை அதுக்கு நம்ம ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிற பிரணீதாவ புக் பண்ணிட்டார் .ஹீரோவோட அத்த பொண்ணு நம்ம ஹீரோயின் (புதுசா இருக்குல). நம்ம சந்தானத்தோட கால்ல விழுந்து கால்சீட் வாங்குராறு.
வில்லன் செல்லம் பிரகாஷ்ராஜ். அரசியல்வாதி ஆக்கலாம் என்னு ஜோசிக்கிறாரு.
 
பிறகு பாவம் டைரக்டர் கதைக்கு எங்க போவாரு “தூள்” பட டீவீடீ வாங்கி போட்டு பாக்குறாரு. ஓகே ஹீரோ கிராமத்து ஆள் ! அங்க பாக்டரிய மூடணும் சரி இங்க வீட்ட காப்பாத்தணும்! அங்க சொர்ணாக்கா வில்லி !இங்க சொர்ணாக்கா மாதிரி இருக்கிற ராதிகாவ ஹீரோக்கு ஹெல்ப் பண்ண சொல்லுறாரு . அங்க சீஎம் நல்லவர் ! இங்க அவர் தான் வில்லன் ! அங்க சீஎம் ஆக ட்ரை பண்ணுறவர் வில்லன் இங்க (நம்ம சிரிப்பு திலகம் கோட்டா சீனி ) நல்லவர். கதை ரெடி!!! இடை இடையே “பூவே தேனே பொன்மானே” எல்லாம் சேர்த்து படத்த முடிக்கிறாரு.
 
ஜீ.வீ.பிரகாஷ் இசை – எங்கேயோ கேட்ட குரல். “மனசெல்லாம் மழையே” பாட்டு மட்டும் மனதுக்கு இதம்.பின்னணி இசை "பிளீஸ் விட்டிருங்க” . ஒளிப்பதிவு ஓகே . அனுஷ்கா ,ஆண்ட்ரியா ,ரோஜா இன்னாத்துக்கு வாராங்க என்னு எனக்கும் தெரியல அவங்களுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.
முன்பாதி காமிடி – பின்பாதி கொலைவெறி !!
மொத்தத்தில லாஜிக் பாக்கம டைம் பாஸுக்கு படம் பாக்கிரவங்களுக்கு நல்ல படம். மத்தவங்க பட போஸ்டர கூட பாக்கதிங்க.
சகுனி –ச(கு)னி...! (ட்ரைலர காட்டி ஏமாத்திப்புட்டங்க மச்சான்!)
 
பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன் 

மண்ணாங்கட்டி - திரைப்பட விமர்சனங்கள்

 முன்னோட்ட விமர்சனம் - விஸ்வரூபம், பில்லா 



வணக்கம் நண்பர்ஸ்!
முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து தமிழ் ரசிகர்களின் இதய துடிப்பை அதிகப் படுத்தியிருக்கும் “விஸ்வரூபம்” ,”பில்லா 2” ஆகிய படங்களை பற்றிய மக்களின் நேரான , எதிர் மறையான விமர்சனங்களை பார்க்கலாம். (கொய்யால நமக்கு இந்த சுத்தத் தமிழ் வருகுது இல்ல!)
விஸ்வரூபம்
உலக நாயகன் இவருக்கு நம்ம தமிழ் சினிமாவ உலக தரத்துக்கு கொண்டு போறது தன நோக்கமாம் (????).ஆனா ட்ரைலர பாத்தா ஆப்கானிஸ்தானுக்கு தான் கொண்டு போய் இருக்காரோ என்னு தோனுது. அது என்ன நாட்டியம் பழகினா ஆம்பிளைங்க எல்லாம் அலி மாதிரி கதைப்பாகளோ! இத எல்லாம் தம்ம தலையிட வரலாறு படத்திலயே பாத்தாச்சு. படத்துல ஒரு பஞ்(சர்) டயலாக்கு “இந்தக் கதையில எல்லாருக்கும் டுவல் ரோல்”. வேணாம் ஆளவந்தான் பாத்து நொந்துபோன எங்களை மறுபடியும் சவடிக்காதிங்க!
“மன்மதன்அம்பு” குத்தி வந்த காயம் இன்னும் போகல. மறுபடியும் ஒரு வலிய தமிழ் மக்கள் தாங்க மாட்டங்க. எங்களுக்கு நீங்க கதைச்சாலும் விளங்குரது இல்லை ! நீங்க படம் எடுத்தாலும் விளங்குறது இல்லை!
தசாவதாரத்தில அந்த நம்பிக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம் என்னு கேட்டா ? விளங்கினவங்க மட்டும் படத்த பாருங்க என்னு நம்ம கே.எஸ்.ஆர் பதில் சொல்லி இருக்காரு. மண்வெட்டி தலையங்களா நீங்க சம்மந்தமே இல்லாம கத சொல்லுவீங்க. நாங்க கை தட்டிட்டே படம் பாக்கணுமா ? கடைசியா இந்த மண்ணாங்கட்டியோட ப்ரீ அட்வைஸ் எந்த அடிமையாவது பாத்து நல்லதா விமர்சனம் எழுதினா மட்டும் தியட்டருக்கு போங்க ! இல்லாட்டிக்கு இந்திய தொலைக்கட்சிகளில் முதல்முறையாக வரைக்கும் வெயிட் பண்ணுங்க !

பில்லா 2
நல்ல படம் வந்தா விஜய் ரசிகர்கள் கூட அஜித் படம் பாப்பாங்க என்னு நிரூபிச்ச படம். மங்காத்தா “(மங்காத்தடா)”. அதற்கு பிறகும் பில்லாவின் இமாலைய வெற்றியின் தொடர்ச்சியாகவும் வரும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை பற்றி நான் சொல்ல தேவை இல்லை.
ஆனா படத்தோட ட்ரைலர பாத்ததான் ஒரே பேஜாரா இருக்கு. சாரம் கட்டிக்கொண்டு அகதியா வர்றவன் எப்புடி கோட்டு போட்ட பில்லாவா ஆகிறான் என்னுறது தன கதையாம். ஒருவேள சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயில சொன்ன கதையா இருக்குமோ (இது விளங்கதவங்க விண்ணைத்தாண்டி வருவாயில வீடீவீ கணேசும் சிம்புவும் சந்திக்கும் காட்சிகளை பார்க்கவும்!) அது ஏன் தல “நீயாநானா கோபிநாத்” மாதிரி எல்லா படத்திலயும் கோட்டு போட்டுட்டு நடிக்கிறீங்க. இந்த வேகாத வெயில்ல இந்த பில்டப் தேவையா ?. ட்ரைலர் புல்லா குண்டு வேடிக்கிறதும், துப்பாக்கி சுடுகிறதும்! தல நாங்க தியட்டர்ல இருந்து உயிரோட வெளியில வருவமா ?
மறுபடியும் ஒரு ப்ரீ அட்வைஸ் : தல ரசிகர்கள் தவிர்ந்தவர்கள் முதல் நாள் காட்சிகளை தவிர்ப்பது உங்கள் உடலுக்கு நல்லது “ஒரு வேள படம் மொக்கையா இருந்து நீங்க காண்டாகி கமன்ட் அடிக்க தல பான்ஸ் உங்கள மிதிக்க இது எல்லாம் தேவையா?” (சொந்த அனுபவம் ஏகன் படத்துக்குப் போய் வாயக்குடுத்து அஜித் பான்ஸ்ட வாங்கி கட்டிக் கொண்டது! இன்னா அடி!)
 

 பின் குறிப்பு :    இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal

நன்றி - கலைஞன்