Friday, July 6, 2012

மண்ணாங்கட்டி - நான் ஈ விமர்சனம்

                                                








வணக்கம் பாஸ் அண்ட் பாஸிஸ்,
“நான் ஈ” அப்பிடின்னா நாங்க என்ன கொசுவா என்னு டைரக்டர கலாய்க்க கூடாது. பாவம் மனுஷன் வித்தியாசமா ட்ரை பண்ணிருக்காரு . முதல்ல அவர பாராட்டிப்புடுவம்.

ஊருக்குள்ள சமூக சேவை செய்யிறாரு நம்ம சமந்தா, ஹீரோ நானி சமந்தா வீட்டுக்கு எதிர் வீட்டில இருக்குறாரு (கொக்கமக்கா ஏண்டா எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில மட்டும் “ஓகே ஓகே அட தேனட” மாதிரி பிகருக்க என்னு வருத்தப் படாதிங்க நண்பர்களா எல்லாம் விதி!) நம்ம வில்லன்கிட்ட சமந்தா டொனேசன் வாங்க போக வழக்கம் போல அவருக்கும் சமந்தா மேல லவ்ஸ் ஆகி 15 லட்சம் குடுத்து அனுப்புறாரு. பிறகு என்ன சமந்தா நானிய லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்சு நானிய ஆள வைச்சு போட்டு தள்ளுராறு.படத்த இனி எப்பிடி முடிக்கிறது. 


ஹீரோ வில்லன பலி வாங்கணும் ஆவியா வந்து கமல் சாரோட “கல்யாணராமன்” மாதிரி பழிவாங்கலாம். இல்லாட்டி தலைவரோட “அதிசய பிறவி ” ஸ்டைல்ல பழிவாங்கலாம். ஆனா ஈயா பிறந்து பழி(லி)வாங்கிறது தமிழ் சினிமாக்கு இல்ல உலக சினிமாவுக்கே புதுசு.
சிஜி சிஜி என்னு எதோ இருக்காம் (செல்போன் திரி ஜியோட அக்காவா இருக்குமோ) அதுல தான் அனிமேசன் சேய்திருக்காங்களாம். அனா சுப்பரப்பு! 




ஒவ்வொரு காட்சியும் அலட்டல் இல்லாத அதிகப்படி இல்லாத அனிமேசனால் கவர்ந்து இருக்காரு டைரக்டர். மதன் கார்கியுடைய “வீசும் வெளிச்சத்திலே” பாடல் வரிகள் அருமை. “ஈடா , ஈடா” பில்ட் அப் சாங் (ஈக்கெல்லாம் பில்ட்டப்பா) புதுமை.பின்னணி இசை ரணகளம். நானி ,சமந்தா வில்லன், எல்லாம் கன கட்சிதம். தியட்டருக்கு போய் குடும்பம் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய நல்ல படம். வருகின்ற 13 ஆம் திகதி வரை வசூலை அள்ளப் போவது உறுதி! (13 நம்ம தலையோட பில்லா 2 வருகுதடியோ!)




பின் குறிப்பு :    இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.


நன்றி - கலைஞன்  

1 comment:

  1. "வருகின்ற 13 ஆம் திகதி வரை வசூலை அள்ளப் போவது உறுதி! (13 நம்ம தலையோட பில்லா 2 வருகுதடியோ!)" ha ha ha super boss.. its true...

    http://pregnancycalculator-a2z.blogspot.com/

    ReplyDelete