Thursday, July 5, 2012

மண்ணாங்கட்டி - சகுனி விமர்சனம்

சகுனி விமர்சனம் 




மச்சீஸ் (மச்சான்ஸ்+மச்சினீஸ்) ,
 
யாரோ ஒரு அப்பாவி தயாரிப்பாளர் நம்ம டைரக்டர்கிட்ட மாட்டிக்கிட்டார் . உடன நம்ம கார்த்திய புக் பண்ணிட்டார் டைரக்டர். பிறகு என்ன ஹீரோயின் தேவை அதுக்கு நம்ம ஐஸ்கிரீம் மாதிரி இருக்கிற பிரணீதாவ புக் பண்ணிட்டார் .ஹீரோவோட அத்த பொண்ணு நம்ம ஹீரோயின் (புதுசா இருக்குல). நம்ம சந்தானத்தோட கால்ல விழுந்து கால்சீட் வாங்குராறு.
வில்லன் செல்லம் பிரகாஷ்ராஜ். அரசியல்வாதி ஆக்கலாம் என்னு ஜோசிக்கிறாரு.
 
பிறகு பாவம் டைரக்டர் கதைக்கு எங்க போவாரு “தூள்” பட டீவீடீ வாங்கி போட்டு பாக்குறாரு. ஓகே ஹீரோ கிராமத்து ஆள் ! அங்க பாக்டரிய மூடணும் சரி இங்க வீட்ட காப்பாத்தணும்! அங்க சொர்ணாக்கா வில்லி !இங்க சொர்ணாக்கா மாதிரி இருக்கிற ராதிகாவ ஹீரோக்கு ஹெல்ப் பண்ண சொல்லுறாரு . அங்க சீஎம் நல்லவர் ! இங்க அவர் தான் வில்லன் ! அங்க சீஎம் ஆக ட்ரை பண்ணுறவர் வில்லன் இங்க (நம்ம சிரிப்பு திலகம் கோட்டா சீனி ) நல்லவர். கதை ரெடி!!! இடை இடையே “பூவே தேனே பொன்மானே” எல்லாம் சேர்த்து படத்த முடிக்கிறாரு.
 
ஜீ.வீ.பிரகாஷ் இசை – எங்கேயோ கேட்ட குரல். “மனசெல்லாம் மழையே” பாட்டு மட்டும் மனதுக்கு இதம்.பின்னணி இசை "பிளீஸ் விட்டிருங்க” . ஒளிப்பதிவு ஓகே . அனுஷ்கா ,ஆண்ட்ரியா ,ரோஜா இன்னாத்துக்கு வாராங்க என்னு எனக்கும் தெரியல அவங்களுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.
முன்பாதி காமிடி – பின்பாதி கொலைவெறி !!
மொத்தத்தில லாஜிக் பாக்கம டைம் பாஸுக்கு படம் பாக்கிரவங்களுக்கு நல்ல படம். மத்தவங்க பட போஸ்டர கூட பாக்கதிங்க.
சகுனி –ச(கு)னி...! (ட்ரைலர காட்டி ஏமாத்திப்புட்டங்க மச்சான்!)
 
பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன் 

No comments:

Post a Comment