Saturday, July 7, 2012

மண்ணாங்கட்டி - The Orphan- விமர்சனம்




வாசக நெஞ்சங்களுக்கு மண்ணாங்கட்டியின் வணக்கங்கள்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம் “ORPHAN”.இது ஆங்கில “ஹோரர்”(அதாங்க திகில்) திரைப்படம்.கத்தி இல்லாமல்,கொடுரமான கொலைகள் இல்லாமல் படம் எடுத்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது.சாதாரண நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைசி பத்து நிமிடங்கள் காட்டாறாக பாய்வது தான் திரைபடத்தின் சுவாரஸ்ய கணங்கள்.
 

கதை :
அநாதை விடுதிக்கு செல்லும் தம்பதிகள் அங்கு அமைதியாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் எஸ்ட்டரை தத்தெடுக்கிறார்கள்.அதன் பிறகு ஸ்ட்டரால் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் தான் கதை அவர்களுக்கு ஒரு மகனும், வாய் பேசமுடியாத மகளும் ஏற்கனவே இருப்பதும் ஒரு மகள் இறந்து போனதும் என்று கதையை விரிவு படுத்தி கடைசி நிமிடங்களில் ரணகளப் படுத்தி இருக்கிறார் இயக்குனர். பின்னணி இசை ,கதாபாத்திர தேர்வு, கதைக்களம்,படம் பிடிக்கப்பட்ட இடங்கள் என்று எல்லாம் மிக அருமை!
 

கொலை செய்யும் சிறுமியை பேயாக சாத்தானாக சைக்கோவாக கட்டாமல் வேறு விதமாக புதுமையாக்கக் காட்டியது இயக்குனரின் வெற்றி.. சில அசைவ வார்த்தைகள் ,சில அசைவைக் கட்சிகள் இருந்தாலும் திகில் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி ..!
மொத்தத்தில் “ORPHAN”- திகில் சுவர்க்கம் !
(எச்சரிக்கை:- மச்சீஸ் படம் பார்த்து கொஞ்ச நாளைக்கு இரவில எந்த சின்ன பிள்ளைய பாத்தாலும் சூச்சூ வாற மாதிரி இருக்கு )  

பி.கு:-  இந்த விமர்சனம் உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும்  விமர்சனங்களுக்கு கீழே உள்ள Facebook தளத்தை like பண்ணவும்.

https://www.facebook.com/MannankattiTiraippataVimarcanankal


நன்றி - கலைஞன்  

No comments:

Post a Comment