Saturday, October 13, 2012

மண்ணாங்கட்டி- மாற்றான் - விமர்சனம்




வணக்கம் நண்பர்களே....................................


இனி இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம்................தீவிரவாதிகள்ட்ட இருந்து தேசத்தைப் பாதுகாக்க விஜயகாந்த் இருப்பதைப்போல, விஞ்ஞானிகள்ட்ட இருந்து நாட்டைப் பாதுகாக்க நம்ம சூரியா இருக்காரு...............


படம் ஆரம்பித்த போதே ஜெனடிக், ஜீனுன்னு பில்டப் பண்ண எனக்கு ஏதோ ஏழாம் அறிவு Part 2 பார்க்கும் உணர்வு............ முக்கிய குறிப்பு – சூரியாவின்

தீவிர ரசிகர்கள் தயவுசெய்து கீழே படித்து காண்டாகாதீர்கள்..................
தள தள காஜல், நல்ல ஒளிப்பதிவு, விதவிதமான லொக்கேஷன் இதைத்தவிர படத்தில் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை............

“Stuck on you”, “Alone” (அதாம்பா சாருலதா படத்தோட ஒரிஜினல்) படங்களோட கருவை எடுத்து நம்ம ஜீவாட ”ஈ“ படத்தை இடைல சொருகி உக்ரேய்ன் நாட்டில சூர்யாவையும் காஜலையும் ஓட விட்டு ( தியட்டர்ல இருந்து நம்மளையும் தான் ) படமெடுத்தா அதுக்கு பேரு மாற்றானாம்............... 

படத்தின் முன்பாதி சூப்பர்...... பின்பாதிதான் கொஞ்சம் இழுவைனு எவண்டா புரளிய கிளப்பி விட்டது???????? முன்னாடி பின்னாடி நடுவில சைடுல எல்லாம் ஒரே மாதிரி எழவுதான்................ கே.வீ.ஆனந்த் சார்ட்ட மறுபடியும் ஒரு கேள்வி....... (http://www.facebook.com/photo.php?fbid=295912217174174&set=pb.285940164838046.-2207520000.1350131548&type=1&theater) நீங்க எதுக்கு சூர்யாவ ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களா காட்டிணீங்க?????? கதைக்கு அது தேவையா......... அல்லது ஒட்டிப் பிறந்தவங்கன்னு வச்சுகிட்டு அதுக்கப்புறம் கதைய தேடிப் பிடிச்சிங்களா?????? (உக்ரேய்ன் வரைக்கும் போய் கதை தேடியிருக்கார் நம்ம டைரக்டர்......).........................

அலுப்பு தட்டும் ஆக்ஷன் சீன்ஸ், சட்டியில் அகப்பையை தட்டுவது போன்ற Background மியூசிக், மொக்கை நடன அமைப்புக்கள், கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகள், கதாபாத்திரங்கள், சூர்யாவின் மொக்கை காமடிகள், லாஜிக்?????? (லாஜிக்கை கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்) பார்க்க வேண்டுமானால் மாற்றான் படத்திற்கு உடனே செல்லவும்.....................

சூர்யாவிடம் ஒரு கேள்வி............... டைரக்டர் கிட்ட சட்டைய கழட்டி உடம்ப காட்டிற சீன் இருந்தா மட்டும்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சீங்களாமே. உண்மையா????????? (நம்ம நேபாளி பரத்தே sixpacks எடுத்திட்டானாம்.... இனி உங்க பப்பு வேகாது மாமா)

 காஜலிடம் ஒரு கேள்வி................ உங்களுக்கு பிரெஞ்சு தெரிது...... இங்கிலீஷ் தெரிது......... நல்ல படங்களை செலக்ட் பண்ண தெரியலையா???????

ஹாரிஸ் ஜெயராஜிடம் ஒரு கேள்வி................ உங்ககிட்ட என்னத்த கேட்கிறது????? இனிமேலாவது படங்களுக்கு சொந்தமா மியூசிக் போட யோசிங்க......................
இந்தக்கதை எடுக்கிறதுக்கு பதிலா “Stuck on you” படத்தோட கதைய (http://www.facebook.com/photo.php?fbid=293796530719076&set=pb.285940164838046.-2207520000.1350133689&type=1&theater) எடுத்திருந்தாலாவது ஜாலியா பாத்திட்டு வந்திருக்கலாம்................
கடைசி சீன்ல நீ floppu….. நீ floppuன்னு சூர்யாவின் அப்பங்காரன் சொல்லும்போது படமும் floppu தாண்டா என்று ரசிகர்களின் கூச்சல் எதிரொலித்ததில் தெரிந்தது பெரும்பாலானவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று.......................................
மொத்தத்தில் மாற்றான்---- நீங்களும் போய் மாட்டிகாதிங்க..............







1 comment:

  1. சரியா சொன்னிங்க அப்பு.தமிழ் நாட்டுல அதிக சம்பளம் வாங்கும் இசை மேதை ஹாரிஸ் வித்யாசாகர் இசை அமைத்த மலையாள படமான தபாண்ணாவில் இருந்து யாரோ யாரோ வை திறமையாக திருடி இருக்கிறார்.

    ReplyDelete