Friday, September 28, 2012

தாண்டவம்- மண்ணாங்கட்டி விமர்சனம்

வணக்கம் நண்பர்களே!




முதலில் யாரோ ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் கதை தன்னோடதெண்னு கோட்டுல கேஸ் எல்லாம் போட்டான். கொய்யால கஜினி பட கதைய சுட்டானு முருகதாஸ் கேஸ் போட்டிருக்கலாம்....... இல்லைனா ரெண்டு பட கதைய சுட்டானு சுந்தர் சீ கேஸ் போட்டிருக்கலாம்................ நீயேண்டா கேஸ் போட்ட மன்கூஸ் மண்டையா.......................


இதுவரைக்கும் இங்கிலிசு படங்கள சுட்டு படமெடுத்த நம்ம டைரக்டர் விஜய் நாலைஞ்சு தமிழ் படங்கள சுட்டு படமெடுத்திருக்காரு.................. படம் கஜினி படம்போல சம்பந்தமே இல்லாமல் ஒரு கொலையோடு ஆரம்பமாகிறது........... பிறகு சம்பந்தமே இல்லாம எமி ஜாக்சன் ஒரு பாடு பாடிகிட்டே என்ட்ரி ஆகிறாங்க.........காரணமே இல்லாம விக்ரம லவ் பண்றாங்க............. விக்ரம் பண்ணும் கொலைகளுக்கு சம்பந்தமே இல்லாம சந்தானம் மாட்டிக்கொள்ள என்ன இழவுடா என்று ரசிகர்கள் யோசிக்கும் போது பிளாஷ்பேக்கில் அனுஷ்கா விக்ரமை திருமணம் செய்து லண்டன வந்து செத்துப்போக, டைரக்டர் கோ படத்திலிருந்து டுவிஸ்டை சுட்டு நம்மள சாகடிக்க......... கொலைக்கு காரணமானவர்களை விக்ரம் பழிவாங்க படம் முடிஞ்சு .......எ பிலிம் பை விஜய்னு டைட்டில்ல போட அவ்வளவு நேரம் அமைதியா இருந்த ரசிகர்கள் இனியாவது படத்த போடுங்கடா என்னு காண்டாகி கத்தினார்கள்.................



விக்ரமுக்கு வயசு போய்விட்டது அவரது கண்களில் நன்றாகவே தெரிந்தது.............ஆனால் வயது உடம்பிலோ நடிப்பிலோ கொஞ்சமும் தெரியவில்லை.......... தனி ஆளாக பல இடங்களில் தாண்டவம் ஆடியிருக்கிறார்......... அதற்கு பொருத்தமாக ஆன்டி அனுஷ்கா அழகாக இருக்கிறார்........இரண்டு பாட்டுக்களை பாடுறதுக்கு மட்டும் எமி ஜாக்சன்.... வேற எதையும் அவர் உருப்படியாக செய்யவில்லை..............
 ஹீரோவுடன் கௌண்டர் அடிப்பதற்கு சரியான வாய்ப்பு இல்லாததால் சந்தானத்தின் காமடிகள் கஞ்சா கருப்பின் காமிடி போல இருந்தது ................
வழமை போல ஜீ வீ பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் நன்று.......
விஜயின் திரைக்கதை தன்னுடைய முன்னைய படங்களைப்போல ஆமை வேகத்தில் இருப்பது த்ரில்லர் படத்திற்கு கொஞ்சமும் பொருந்தவில்லை......................குத்துப்பாட்டு இருக்க வேண்டிய இடத்தில் தாலாட்டு பாடியது போல் இருந்தது.......................



கடைசிக்காட்சியில் நாலு கொலை செய்தாலும் ஐந்து கொலை செய்தாலும் ஒரே தண்டனை தான் என்று நாசர் விக்ரமை கொலை செய்ய விட்டுவிட்டு வெளியில் காத்திருப்பது பக்கா நாடகத்தனம்................
பட்ஜெட்டை குறைப்பதற்கு பாடல்களை பயன்படுத்தியிருப்பது நன்றாக தெரிகிறது.............. ஆனால் காட்சிப்படுத்திய விதம் நன்றாக இருந்தது...... 
எவ்வளவு தான் குறைகள் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு லண்டனை புதுமையாக காட்டுகிறது.............. சண்டைக் காட்சிகளை நீட்டாமல் விட்டதற்கு விஜய்க்கு ஒரு நன்றி................ குடும்பத்துடன் சென்று பார்க்கக் கூடிய படமென்றாலும் நண்பர்களோடு விசிலடித்து பார்க்க விரும்புபவர்கள் கொஞ்சம்......................................... ஏதோ உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா............................
மொத்தத்தில் தாண்டவம் ........ விக்ரம் மட்டுமே ஆடியிருக்கும் சிவதாண்டவம் .............
 

மேலும் விமர்சனங்களுக்கு .............. கீழுள்ள Facebook பக்கத்தை Like செய்யவும்........
மண்ணாங்கட்டி விமர்சனங்கள் 









No comments:

Post a Comment