Saturday, September 8, 2012

முகமூடி- சூப்பர் (சப்ப) ஹீரோ விமர்சனம்


வணக்கம் நண்பர்களே,

“காதல் எங்கிறது காலைக்கடன் மாதிரி ....... அடக்கி வச்சாலும் பிரச்சனை.... அடிக்கடி வந்தாலும் பிரச்சனை....”


இப்ப என்ன இழவுக்கு தத்துவம் சொல்றான்னு காண்டாகாதிங்க........
தமிழ் சினிமாட முதல் சூப்பர் ஹீரோ படமாம். ( அப்போ நம்ம விஜயகாந்த் படமெல்லாம் சூப்பர் ஹீரோ படம் இல்லையா??? )
கந்தசாமி, வேலாயுதம், ஆழ்வார் எல்லாம் பார்த்து நொந்து போன தமிழ் ரசிகர்களுக்கு இது ஒன்னும் அவ்ளோ பெரிய மொக்க படம் இல்லை. மிஷ்கின் தன்னோட கனவு படம் கனவு படமுன்னு சொன்னாரு ( அவன் கனவில தீய வைக்க)
Mishkin


நம்ம தமிழ் சினிமாவில இருக்கிற முக்கியமான பிரச்சனை இங்கிலீஷ் படத்த காப்பி அடிச்சு உலக சினிமான்னு பீலா விடுறது...... ப்ருஸ் லீ படங்கள காப்பி அடிச்சு ஒரு ஹீரோ, பாட்மான் ஜோக்கர காப்பி அடிச்சு ஒரு வில்லன்..... “பைரேட்ஸ் ஒப் தே கரிபியன்” படத்த காப்பி அடிச்சு ஒரு கிளைமாக்சு........
படம் முடிஞ்சு போச்சு...


இப்பிடி படம் எடுத்ததுக்கு நம்ம ராணி காமிக்ஸ் முகமூடி “மாயாவி” கதையையே எடுத்திருக்கலாம்....... மிஷ்கின மட்டும் பிழை சொல்ல முடியாது...... தமிழ் ரசிகர்களாகிய எங்கிட்டயும் பேஜர் இருக்கு..... நம்ம சூப்பர் ஹீரோனா மந்திரத்தால பறக்கணும்... இல்லைனா குருவிய பார்த்து கும்பிட்டிட்டு பறக்கணும்... (???) வேற்று கிரகவாசி, விஞ்ஞான கற்பனைகள் எதையுமே ஏத்துகிறது கிடையாது.


.சரி இப்ப கதைக்கு போவோம்... ஒரு மாஸ்டர் கிட்ட குங்க்பு கத்துகிறாரு நம்ம ஹீரோ ஜீவா..... சும்மா சொல்லக்கூடாது, பறந்து பறந்து பைட் பண்ணுறாரு.( நம்ம பைட் மாஸ்டருக்கு ஒரு சலாம் ) ஹீரோயின் அறிமுக காட்சியில் புதுமை செய்யிறேன்னு சொல்லி உலக மகா காமடி பண்ணியிருக்காரு டைரக்டரு...... வாயமூடி சும்மா இருடா பாடலின் இசையும் கார்க்கியின் வரிகளும் இனிமை...... பாடலின் தொடக்கத்தில் என்ன பொண்ணுடா என ஹீரோ சொல்ல, பொண்ணாடா இது, பிட்டு படத்தில வாற ஆண்டி மாதிரி இருக்குன்னு சொல்லி ரசிகர்கள் கொந்தளித்ததை என்னன்னு சொல்ல... அவ் அவ் அவ்......




ஒவ்வொரு படத்திலயும் ஹீரோயின் ஹீரோட பைட்ட பாத்திருப்பா, இல்லைனா ஸ்டைல்ல பாத்திருப்பா, இல்லைனா முகத்த பாத்திருப்பா (பவர் ஸ்டார் கூட விதி விலக்கில்ல) கொய்யால ஹீரோ உச்சா போறத பார்த்தது இந்த படத்திலதான்...


நரேன் நல்ல நடிகர் எண்டு ஊருக்கே தெரியும்.... ஆனா ஓவர் ஆக்டிங் பண்ணி உசிர எடுபார்னு இப்ப தான் தெரிஞ்சிது...... அந்த பிளாஷ்பேக் சீனுகாகவே நம்ம மிஷ்கினுக்கு தனியாக ஒரு கொடும்பாவி எரிக்கலாம்...


முதல்ல பைட்ட நம்பி படமெடுக்க கிளம்பினாரு டைரக்டரு.... காதல் இல்லைன்னு ஹீரோயின கூப்பிடாரு..... வில்லன் இல்லைன்னு நரேனை கூப்பிடாரு..... செண்டிமெண்ட் இல்லைன்னு குங்க்பு மாஸ்டரை போட்டு தள்ளினாறு....... குழந்தைகள் பார்க்கணும்னு சூப்பர் ஹீரோ காஸ்டியும் போட்டு விட்டாரு.......( கொய்யால ! படத்தில கதையே இல்லையே அத பத்தி கொஞ்சமாவது யோசிச்சாரா )

மொத்தத்தில் முகமூடி பார்க்க போனவர்களுக்கு – குல்லா

No comments:

Post a Comment