Wednesday, September 19, 2012

மண்ணாங்கட்டி -வரப்போகும் திரைப்படங்கள்- ஒரு பார்வை



வணக்கம் நண்பர்களே,
 


தமிழ் படங்கள் இல்லாமல் காஞ்சு கருவாடா போயிருக்கும் எங்களுக்கு வரப்போற படங்கள பத்தி பேசியாவது சந்தோசப்படுவம் மாப்புள்ள.........


 


இந்தவருஷம் நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார்ட கொச்சடையான் ரிலீஸ்...... நம்ம தலைவர்ட மகள் சௌந்தர்யா இயக்கும் படம்....... ( உங் கொக்கா மூணு மூணுனு ஒரு படம் எடுத்தாளே..... அத ஒரு தடவ கூட பார்க்க முடியல...... இதுல மண்ணாங்கட்டிய வேற விமர்சனம் எழுதச்சொல்லி பலபேர் கேக
்குறாய்ங்க......) தலைவர் Black & White காலத்தில வந்தாலே விசில் பறக்கும்..... அனிமேஷன்ல வாராரு... என்னாக போகுதோ...... ஆனா சில மறுக்க முடியாத உண்மைகள சொல்லியே ஆகணும்..... தலைவர் படம்னு சொன்ன போதிலும் தலைவர்ட முந்திய படங்கள விட கொச்சடையானுக்கு எதிர்பார்ப்பு குறைவு................................................................................................
 
 
கமல் சாரு படம்னாலே ஏதாவது வித்தியாசமா சொல்ல வருவாரு........ (புரியிறது புரியாதது வேற விஷயம்) பிரமாண்டமான ஒரு படம்னு Trailer இல் தெரிந்தாலும், ஆப்கானிஸ்தானுக்கும் பரதநாட்டியத்துக்கும் என்ன சம்பந்தம்னு சுத்தமா புரியல................. அனிருத்தோடு முத்தமிட்ட (ஒருவேளை நம்ம கமல் தான் சொல்லி குடுத்தாரோ) புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கிய ஆண்ட்ரியா (ஆன்டி) ஹீரோயினா நடிக்கிறாரு......... “இவன் யாரென்று தெரிகிறதா” பாடல், பாடல் தொகுப்பு வெளிவர முன்னமே பாடல்களுக்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது...................................................................
 
 
துப்பாக்கின்னு ஏன் தான் பேர் வச்சோம்னு முருகதாசும் விஜய்யும் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கும் படம்............ Teaser ஐ வெளியிடவே பெரும் சிக்கலாக இருந்தும் கூட படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.............. படத்தின் கதை என்னவென்று ஊகிக்கமுடியாத நிலையில் (மண்ணாங்கட்டில போட்டிருக்கோம்ல- துப்பாக்கியின் கதை) பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.....................................................................................
 
 
மாற்றான் பாடல்களை என்னதான் கேவலப்படுத்தினாலும் (மாற்றான் இசை விமர்சனம் ) ஹாரிஸ் மியூசிக் எங்கிறது தனுஷ் மாதிரி......... பாட்ட கேட்ட உடன பிடிக்காது........... கேட்க கேட்க தான் பிடிக்கும்........... தீயே தீயே, நானி கோனி பாடல்கள் இப்போதைய இளைஞர்களின் Ringtoneகள். ......................................................
 
 
அடுத்த வாரம் வெளியாகப்போகும் தாண்டவம் (தாண்டவம் பாடல் விமர்சனம்-தாண்டவம் இசை, முன்னோட்ட விமர்சனம் ) விக்ரம் ரசிகர்களை மட்டுமல்லாமல் பல பேருடைய எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது......................... விஜயின் இயக்கத்தில் கிரீடம், மதராசப்பட்டினம்,தெய்வத்திருமகள் என்று வித்தியாசமான (இங்கிலீசு படங்கள்ல சுட்டது தானே.........) கதையம்சங்கள் வெளிவந்த படங்களின் வரிசையில் இதுவும் அமையுமென நினைக்கத்தோன்றுகிறது.......................................................
 
 
விண்ணைத்தாண்டிவருவாயா படத்துக்கு பிறகு நடுநிசிநாய்களால் நாறிபோன தனது இமேஜை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு கௌதம்மேனன் கையிலெடுத்திருக்கும் காதல் ஆயுதம்தான் இந்த நீ தானே என் பொன்வசந்தம்........ இளையராஜாவின் இசையில் பாடல்கள் எண்பதுகளின் சாயலில் இதமாக இருக்கிறது.................( யுவனையே மியூசிக் போட விட்டிருக்கலாம்பா............)
 
 பிரியாணி, அலெக்ஸ்பாண்டியன், ஆதிபகவன், பரதேசி,கும்கி, போடாபோடி என்று வரிசையில் காத்து கொண்டிருக்கும் படங்கள் ஏராளம்..........................

No comments:

Post a Comment