Sunday, September 9, 2012

மண்ணாங்கட்டி- பாகன் விமர்சனம்


தமிழ்ப் படங்களின் வருகை வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறதால ஏதாவது புதுபடம் போடுங்கப்பா வந்து பார்க்கிறோமுணு சொல்ற அளவுக்கு நம்ம நிலைமை.


ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் நீண்ட நாளைக்குப் பிறகு ஹீரோவா நடிச்சிருக்கிற படம்தான் பாகன். பாகன்னா யானைய ஓட்டுவாங்க...ஆனா நம்ம ஸ்ரீகாந்த் சைக்கிள் ஓட்டிறாரு.

பொல்லாதவனின் மோட்டார் சைக்கிளை சுத்தி கதை நகர்வதைப்போல இந்தப் படத்தில் சைக்கிளை சுத்தி கதை நகருகிறது. (இல்லப்பா கஷ்டப்பட்டு டைரக்டர் கதைய தள்ளுராறு)
ஹீரோவின் வாய்ஸில், வில்லனின் வாய்ஸில், டைரக்டரின் வாய்ஸில் கதை சொல்லி படம் பார்த்த நமக்கு சைக்கிளின் வாய்ஸில் கதை சொல்லியிருப்பது புதுமை.


ஓவர் நைட்ல ஒபாமாவாக துடிக்கும் ஹீரோ தொடங்கும் எல்லா பிஸ்னசும் புட்டுக்க, பணக்கார பொண்ண  லவ் பண்ணி வாழ்க்கைல செட்டில் ஆவம்னு ஊர்ல உள்ள பெரிய தாதா பொண்ண லவ் பண்றாரு நம்ம ஸ்ரீகாந்த். அவளோட நைனா காதுக்கு லவ் மேட்டர் போக வீட்ட விட்டே ஓடி வந்திடுறா நம்ம ஹீரோயின். அவளோட அப்பங்காரன் துரத்திட்டு வர, பணந்தான் முக்கியம் நீ இல்லன்னு சொல்லி ஹீரோயின கழட்டி விட்டிட்டு தப்பிகிறாரு நம்ம ஹீரோ. இதற்கு பிறகு என்ன நடக்கிறதெங்கிறதே கதை.....

“மனம் கொத்தி பறவை”குள்ள சைக்கிள விட்டு ஏத்தி படம் எடுதிருக்காரு டைரக்டரு அஸ்லம். கதைக்கு சம்பந்தமே இல்லாம தொடக்கத்தில் தோன்றி கடைசியில் வெடித்து சிதறுகிறது சைக்கிள். (நம்ம மண்டையும் தான்)

ஸ்ரீகாந்தின் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆறுதல் பாராட்டா சூரியும், பிளக் பாண்டியும் தான். “வடக்கு பக்கம் போகாத.... வடக்கு பக்கம் போகாத..... எண்டு சொன்னியே, கிணத்து பக்கம் போகாத எண்டு சொன்னியா”, என்று சூரி கேட்கும் போது தியேட்டர் முழுவதும் சிரிப்பலை. நாடகத்தனமான நகைச்சுவைகள் சிரிக்க விடாமல் கடுப்பாக்குகின்றன.


சின்ன பட்ஜெட் படம் என்ற காரணத்தால் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. ஜேம்ஸ் வசந்தனின் இசை மனதுக்கு இதம். இறுதியாக அறிமுக டைரக்டர் அஸ்லமிடம் ஒரு கேள்வி.....

படக்கதைக்கும் திரைக்கதைக்கும் கதைக்களத்திற்கும் சம்பந்தமே இல்லாம படம் எடுக்கிறதுக்கு யாருப்பா சொல்லிதந்தது????

No comments:

Post a Comment